அரிசி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
எதிர்காலத்தில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு பெரும்போகத்திற்கான நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் அறிவிக்காததால், தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
உற்பத்தி செலவுகள்
பெரும் போகத்தில் ஒரு கிலோ நெல்லுக்குக் குறைந்தபட்சம் 140 ரூபாய் உத்தரவாத விலை அறிவிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் ஹுலன்னுகே, லாஹுகல மற்றும் செங்கமுவ பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நெல்லுக்கான உத்தேச விலை உடனடியாக நிர்ணயிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன( Namal Karunarathna) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 13 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
