முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் அரிசி வழங்கும் நிகழ்வு
கடற்றொழில் அமைச்சின் ஊடாக கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வு இன்று (19.07.2024) முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் (Douglas Devananda) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 3500 கடற்தொழில் குடும்பங்களுக்கு சீன
அரசாங்கத்தின் உதவியுடன் குடும்பம் ஒன்றுக்கு தலா 20 கிலோ அரிசி வீதம்
கடற்தொழில் அமைச்சின் ஊடக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்தொழில் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி பணியினையும் தொடக்கிவைத்துள்ளார்.
அபிவிருத்தி பணிகள்
செம்மலை கிராமத்தில் உள்ள ஒரு கிலோமீற்றர் தூரம் கொண்ட பிரதேச சபை வீதி கடற்றொழில் அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


