அரசியலமைப்பு திருத்தம் மக்களின் தேவை அல்ல: குடிமக்கள் கூட்டணி அமைப்பு கடும் எதிர்ப்பு
அரசியலமைப்பு திருத்தம் மக்களின் தேவை கிடையாது என குடிமக்கள் கூட்டணி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் 22 ஆம் திருத்தச்சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இந்த தீர்மானம் தொடர்பில் குடிமக்கள் கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் அரசியல்சாசனம்
இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர், நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எதேச்சதிகார போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், திட்டமிட்ட அடிப்படையில் நாட்டின் அரசியல்சாசனம், மக்களின் வாக்குரிமை, நாடாளுமன்றம் என்பனவற்றை இழிவுபடுத்துவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குடிமக்கள் கூட்டணி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 20 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
