அநாவசியமான முறையில் அரிசி இறக்குமதி: முதித் பெரேரா குற்றச்சாட்டு
தனிப்பட்ட சில தரப்பினரின் இலாப நோக்கங்களுக்காக அரிசியை இறக்குமதி செய்வதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தின் சில கொள்கைகள் காரணமாக அநாவசியமான முறையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விற்பனையில் வீழ்ச்சி
உள்நாட்டு அரிசி விற்பனையில் வீழ்ச்சி, சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதனால் உள்நாட்டு விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 750 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு எந்தவித கட்டுப்பாட்டு விலையும் அறிவிக்கப்படவில்லை என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.