அரிசி இறக்குமதி செய்ய முயற்சிக்கும் அரசாங்கம்:கோவிந்தன் கருணாகரன் விசனம்(Video)
அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதி செய்யும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று (12.10.2022) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அரிசி இறக்குமதி

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“சிறுபோகத்தில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபை காணப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதி செய்யும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.”என கூறியுள்ளார்.
தீர்மானங்கள்

விவசாய பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில்
எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய வயல்காணி உழுதல், விதைப்பு தொடங்குதல், வேலி
அடைத்தல், கால்நடைகள் அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து
விடயங்களுக்கான தீர்மானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன் போது வங்கி கடன்கள், கால்நடை பிரச்சினை, யானை பிரச்சினைகள், காடுகள் அழிப்பு, கடந்த சிறுபோகத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள், பெரும்போகத்தில் விவசாயிகள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டு திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரத்தின் விலையை நிர்ணயித்தல், சேதனப்பசளை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.