வவுனியாவில் ஜனாதிபதியின் ஆலோசனை படி இடம்பெற்ற அரிசி விநியோகம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickramasinghe) ஆலோசனைக்கு அமைய வவுனியாவில் (Vavuniya) குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி விநியோகிக்கும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் உள்ள 2,511,840 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
செலவிடப்பட்ட பணம்
அத்துடன், இதற்காக அரசாங்கம் 4 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி விகிதம் இரண்டு மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
