இலங்கையின் தற்போதைய சீர்திருத்தங்களுக்கு பூரண ஆதரவு வழங்கப்படும்: ரிக்கார்டோ புலிட்டி உறுதி
பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சிக்கான மாற்றத்தை ஆதரிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவது அவசியமான ஒன்று என ஐஎவ்சியின் ஆசிய பசுபிக்கிற்கான துணைதலைவர் ரிக்கார்டோ புலிட்டி( Riccardo Puliti) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர், இலங்கையின் தற்போதைய சீர்திருத்தங்களிற்கான தனது ஆதரவை உறுதி செய்துள்ளார்.
அதேவேளை அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சிக்காக தனியார் துறையினர் தலைமைதாங்கும் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வலுவான முதலீடு
நாட்டின் ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர், வலுசக்தி அமைச்சர் உட்பட பலரை இலங்கை விஜயத்தின் போது அவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
நாடு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்போது அந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதும், பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சிக்கான மாற்றத்தை ஆதரிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதும் முக்கியமானது என புலிட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையான சீர்திருத்தங்களைத் தழுவி சாதகமான வணிகச் சூழலை வளர்ப்பதன் மூலமும் நிலையான உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும் இலங்கை தனது முழுமையான பொருளாதார ஆற்றலைத் திறந்து அதன் மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
"By embracing necessary reforms, fostering a conducive business environment, and prioritizing sustainable, inclusive growth, #SriLanka ?? can unlock its full economic potential and create a bright future for its people" – @riccardopuliti
— IFC South Asia (@IFC_SouthAsia) May 6, 2024
More: https://t.co/qbzsw4sUDu pic.twitter.com/Ma1r0ON5x5
நாங்கள் தனியார் துறையுடன் இணைந்து ஒரு வலுவான முதலீட்டு குழாய்த்திட்டத்தை உருவாக்குவதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மேலும் நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம்.
தரமான வேலைகளை உருவாக்குதல் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நகர்வுகள் முக்கியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |