யாழில் மரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
யாழ். புத்தூர்(Jaffna) பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த பின்னர் அவரது சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
