கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்(Keheliya Rambukwella)விளக்கமறியல் உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பான வழக்கில் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, நேற்றையதினம் (06) குறித்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டிருந்தார்.
இந்திய கடன் உதவி
அதன்போது அவருக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய கடனுதவித்திட்டத்தின் கீழ் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மற்றும் புற்றுநோயாளர்களுக்கான "ரீடொக்சி மெப்" போன்ற மருந்துப் பொருட்களின் மாதிரிகளை உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுங்கத் திணைக்களத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |