ஐ.நா 30-1 தீர்மானத்தில் இருந்து விலகிய இலங்கை! ஐரோப்பிய ஒன்றிம் விமர்சனம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
இலங்கையும், ஐரோப்பிய ஒன்றியமும் விடுத்துள்ள கூட்டு செய்திக்குறிப்பு இதனை தெரிவிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையும் கூட்டு ஆணையத்தின் 23 வது கூட்டத்தை இன்று காணொளி மாநாடு மூலம் நடத்தின. இதனையடுத்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சனைகள் விடயத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையும் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜெனீவா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30-1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் இதன்போது விமர்சித்துள்ளது.