செயற்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டம்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிக்குட்பட்ட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் 2025ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில் திருகோணமலையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போது மாகாண சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் திணைக்களம், சிறைச்சாலை மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புத்துறை, ஆயுர்வேதத்துறை மற்றும் சமூக சேவைகள் துறை ஆகியவற்றின் திட்ட முன்னேற்றம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
சம்பந்தப்பட்ட திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் என பலரும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதே எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் மேலும் கலந்துரையாடப்பட்டது.

