இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Dr. S. Jaishankar Sri Lanka India NPP Government
By Rakesh Dec 20, 2025 01:15 PM GMT
Report

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாயன்று ஒரு நாள் விஜயமாக கொழும்பு வருகின்றார்.

இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் அவர் கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்குக் கூட்டணி) ஆகிய தரப்பினரை ஒன்றாகச் சந்திக்கவிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.

இந்தியாவில் 100ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! வெளியாகியுள்ள தகவல்

இந்தியாவில் 100ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! வெளியாகியுள்ள தகவல்

இந்தியா உதவி

பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அயல்நாடு என்ற முறையில் பெருமளவில் விரைந்தும், தொடர்ந்தும் இந்தியா உதவி வரும் பின்னணியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒரு நாள் விஜயமாகக் கொழும்பு வருகின்றார்.

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் | Jaishankar Is Coming To Sri Lanka On Tuesday

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வந்திருந்த சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நான்கு தலைவர்களையும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இரண்டு தலைவர்களையும் சேர்த்து ஒன்றாகச் சந்தித்திருந்தார்.

அந்தச் சந்திப்பின் தொடர்ச்சி இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு விஜயத்தின் போதும் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிகின்றது.

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழரசுக் கட்சி பிரமுகர்களான கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் செவ்வாயன்று இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பார் என்று தெரியவந்துள்ளது.

நரேந்திர மோடியுடனான சந்திப்பு

சங்கு கூட்டணியின் சார்பில் இரண்டு தலைவர்கள் முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். இந்தத் தடவையும் அவர்கள் சார்பில் இருவர் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றுவர் என்று தெரிகின்றது.

ஏற்கனவே இதே 23ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், சங்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களுமாகச் சேர்ந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் | Jaishankar Is Coming To Sri Lanka On Tuesday

ஆயினும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையையொட்டி அந்தச் சந்திப்பு தள்ளிப் போய் இருப்பதாகத் தெரியவருகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஒரு நாள் கொழும்பு விஜய விவரங்கள் நாளை(21) அளவில் உறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இந்த விஜயத்தின்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரியவந்தது.

இலங்கையில் ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரதான பங்காளிகளான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் மாத இறுதியில் புதுடெல்லி செல்கின்றார் என்று கூறப்படும் பின்னணியில் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வருகை தந்து இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US