வடக்கில் அடிப்படை அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வு கூட்டம்

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Thevanthan Apr 24, 2026 04:15 AM GMT
Report

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் கீழ் 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டமானது, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று(23) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக சுமார் 1,875 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் பாரிய உட்கட்டமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, டிட்வா பேரிடர் மற்றும் பருவகால வெள்ளத்தால் பாதிக்கப்படும் பல்வேறு பகுதிகளில் வடிகால்களைத் தூர்வாரிப் புனரமைக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் அடிப்படை அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வு கூட்டம் | Review Meeting On Basic Development

அத்துடன், மாகாணத்திலுள்ள பிரதான மற்றும் நடுத்தரக் குளங்களின் நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தி, எதிர்வரும் சிறுபோகச் (யால - 2026) செய்கைக்குத் தேவையான நீரைத் தடையின்றி வழங்குவதற்கான அனைத்து ஒழுங்குகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

விவசாயத் திணைக்களத்தின் ஊடாக 692 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

97 அபிவிருத்தி திட்டங்கள்

நடப்புச் சிறுபோகத்தில் (யால - 2026) சுமார் 49,814 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உப உணவுப்பயிர்களைச் செய்கை முன்னெடுக்க இலக்கிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக நிலக்கடலை (13,000 ஹெக்), பயறு (2,000 ஹெக்) மற்றும் உழுந்துச் செய்கைகளில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அத்துடன், திராட்சைச் செய்கைக்கான விசேட திட்டங்களுக்காக 16 மில்லியன் ரூபாவும், நவீன விவசாய தொழில்நுட்ப விரிவாக்கத்திற்காக 215 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கில் அடிப்படை அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வு கூட்டம் | Review Meeting On Basic Development

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக 377 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 97 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 'டித்வா' வெள்ளப் பெருக்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 110 மில்லியன் ரூபாவும், கிளிநொச்சியில் 79 மில்லியன் ரூபாவும் இதுவரை இழப்பீடாக வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடமாடும் மருத்துவ முகாம்கள் ஊடாக சுமார் 1,600 விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீன்பிடி அலகின் ஊடாக 33 மில்லியன் ரூபா செலவில் மாகாணத்திலுள்ள குளங்களில் நன்னீர் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இருப்புச் செய்யும் பணிகள் ஐந்து மாவட்டங்களிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி பணிகள் தொடர்பான முன்னேற்றம்

அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த ஆளுநர், அனைத்துத் திட்டங்களையும் உரிய காலப்பகுதிக்குள் விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

குறிப்பாக, கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் உள்ள அலுவலகக் கட்டுமானங்களை விரைந்து முழுமைப்படுத்தி, அவற்றை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

வடக்கில் அடிப்படை அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வு கூட்டம் | Review Meeting On Basic Development

அத்துடன் நிர்வாக ரீதியான சவால்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்த ஆளுநர், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் மேலதிக அறிவுறுத்தல்களையும் இதன்போது வழங்கினார்.

இந்தத் துறைசார் மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வடக்கில் அடிப்படை அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வு கூட்டம் | Review Meeting On Basic Development

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பக உற்பத்திகளுக்கு எதிராக நடவடிக்கை!

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பக உற்பத்திகளுக்கு எதிராக நடவடிக்கை!

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..!

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..!



மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US