கிழக்கு மாகாண இந்திய உதவி திட்டம் தொடர்பில் மீளாய்வு கலந்துரையாடல்
கிழக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று(22.04.2026) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேசப்பட்ட விடயங்கள்
இதன்போது, மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் முன்னேற்றம், இந்திய உதவியுடன் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம், மாகாண வருமான இலக்குகளை அடைவது, கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டங்கள் பற்றிய மதிப்பீடு மற்றும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நிறுவனத் தலைவர்களின் தலையீடு ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலரும்இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.



