டிரானின் கருத்து உண்மைக்கு புறம்பானது: தேசபந்து தென்னகோனின் உதவி தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி விளக்கம்
வாகன விபத்து குற்றச்சாட்டின் பேரில், தாம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உதவியை நாடவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கூறியுள்ளார்.
தனது வாகனத்தில் ஒருவரை மோதியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தாம் தேசபந்து தென்னகோனின் உதவியை நாடியதாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியான செய்திகளை அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர் மறைமாவட்டத் தொடர்பாடல் பிரிவின் உறுப்பினரான அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, பிணையைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு அதிகாரியிடமும் தாம் உதவி கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழயுத்தத்தின் விளைவால் போராட்டம் நிறைந்த வாழ்க்கையையே போண்டாமணி வாழ்ந்தார்: தென்னிந்திய நடிகர் உருக்கம்
பிணை வழங்க மறுப்பு
இந்த விடயம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அத்துடன், தாம் தென்னகோனுக்கு நன்றி தெரிவித்ததாக வெளியான செய்திகளும் பொய்யானவை என்று சிறில் காமினி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற பின்னர் கொட்டாஞ்சேனை பொலிஸார் பிணை வழங்க மறுத்தனர். இதனையடுத்து மறுநாள் வரை தடுத்து வைக்கப்பட்டதாக அருட்தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், மறுநாள் காலை நீதிமன்றத்துக்கு செல்ல ஆயத்தமானபோது, நண்பர்களின் உதவியுடன் காயமடைந்த தரப்பினருடன் பேச்சு நடத்தி அதன்படி, இழப்புகள் ஈடுசெய்யப்பட்டன.
தேசபந்து தென்னகோனின் உதவி
இதன் காரணமாக தம்மை விடுவிப்பதற்காக யாரிடமும் உதவி கேட்கவில்லை. அத்துடன் இந்த விவகாரம் முடிந்த பின்னரே கர்தினாலுக்கு அது தெரியவந்தது என்றும் கொழும்பு உயர் மறைமாவட்டத் தொடர்பாடல் பிரிவின் உறுப்பினரான அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் கர்தினால், தேசபந்து தென்னகோனின் உதவியை நாடினார் என்றும் பிணை வழங்கப்பட்டதும், கர்தினால், தென்னக்கோனுக்கு நன்றி தெரிவித்தார் என்று பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |