புலம்பெயர் நாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட படுகொலை முயற்சி! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
தமிழ் மக்கள் இந்த நாட்டில் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற நிகழ்வு இன்று புலம்பெயர் நாடுகளில் மிக அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுவருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாவது நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரச முயற்சி
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''இனப்படுகொலை கருத்துக்களுக்கு இந்த அரசாங்கம் தெரிவிக்கும் எதிர்ப்பானது தமிழினப்படுகொலையினை மூடிமறைப்பதற்கான ஒரு செய்தியாக அரசு முயற்சிகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதனைவிடுத்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியான தீர்வினைப்பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.
கொத்தனிகுண்டுகளினாலும் இராசாயணகுண்டுகளினாலும் ஒரு சிறிய பகுதிக்குள் அவர்கள் ஒடுக்கப்பட்டு மக்கள் வெளியேறிச்செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டு பாரிய கொடூர இனஅழிப்பு நடைபெற்ற தினமாக மே 18காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் விடுவிப்பு
இந்த தினத்தினை ஒருவாரகால அந்த துக்கதினமாக எங்களின் தமிழரசுக்கட்சியானது அனைத்து பகுதிகளுக்கும் தமிழ் மக்களின் செய்தியாக கொண்டுசெல்கின்றோம்.
தமிழ் மக்களின் இந்த இழப்புகளை தமிழ் மக்களின் விடுவிக்காக கொண்டுசெல்லப்படவேண்டும்.
இது தொடர்பில் எதிர்கால சந்ததிகள் இதனை உணர்ந்துகொண்டு தொடர்ச்சியாக இதனை முன்னெடுக்கவேண்டும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
