அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச திருக்குறள் மாநாட்டில் அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை பங்கேற்பு
அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் நடைபெறும் ஐந்தாவது சர்வதேச திருக்குறல் மாநாட்டில் இலங்கையின் யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மதக் குருவான அருட்பணி ரூபன் மரியாம்பிள்ளை திருக்குறல் சார்ந்த ஆய்வுக் கட்டுரையை சமர்பிக்கின்றார்.
2024 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 05 ,06, 07 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் நடைபெறும் ஐந்தாவது சர்வதேச திருக்குறல் மாநாட்டில் அருட்பணி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் தமிழ் கூறும் நல்லுலகின் தனிப்பெரும் சொத்தான திருக்குறள் நூலை முழு உலகிற்கும் உயர்த்திக் காட்டி இந்த உலகப் பொதுமறையின் ஒழுக்கநெறிக் கருத்துக்களை கத்தோலிக்க சமய வேதாகம நூலின் ஒழுக்க நெறிக் கருத்துக்களுடன் ஒப்புநோக்க வழி சமைத்தவர்கள் கிறிஸ்தவ மிசனறிமாரே என்ற கருத்துக்களை முன்வைத்து அவரின் ஆய்வுக் கட்டுரையை முன்வைக்கின்றார்.
கடவுள் வாழ்த்தில் காணப்படும் கருத்துக்கள்
அவர் சமர்பிக்கும் கட்டுரையானது இரண்டு முக்கிய பகுதிகளாக அமைந்துள்ளது. அதாவது முதற் பகுதி கிறிஸ்தவ சமயப் பிரசாரத்திற்காக இங்கு வந்த மிசனறிமாரின் வாழ்வையும் தமிழ்ப்பணியை ஆய்வு செய்து அவர்கள் எவ்வாறு திருக்குறளை இனங்கண்டு பல்வேறுபட்ட ஜரோப்பிய மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்து திருக்குறளுக்கு உரை எழுதி திருக்குறளைத் திறனாய்வு செய்து முழு உலகிற்கும் அறிமுகப்படுத்தினர் என்பதை ஆராய்கிறது.
இந்த ஆய்வின் இரண்டாம் பகுதி உலகப் பொதுமறை எனப்படும் ஒழுக்கநெறி நூலாம் திருவள்ளுவரின் திருக்குறளில் காணப்படும் ஒழுக்க நெறிக் கருத்துக்கள் கத்தோலிக்க சமய மக்களின் புனித நூலான வேதாகமம் முழுவதிலும் பரந்து காணப்படுகின்ற நிலையில் திருக்குறள் முதலாம் அதிகாரம் கடவுள் வாழ்த்தில் காணப்படும் கருத்துக்களை திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதியான புதிய ஏற்பாட்டின் பல நூல்களுடன் ஒப்புநோக்கி கத்தோலிக்க சமய ஒழுக்கவியல் கருத்துக்களும் திருக்குறளில் நிறைந்துள்ளன இதை எண்பிக்க வழி சமைத்தவர்கள் கிறிஸ்தவ மிசனறிமாரே என நிருபிக்கிறது என தனது ஆய்வை முன்வைக்கின்றார்.
மேலும் கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் ஊடக வருகை , இலங்கை திறந்த பல்கலைக் கழகம் யாழ்ப்பாண நிலையம் , யாழ் வவுனியா பல்கலைக்கழகம் விரிவுரையாளரகவும் , பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் - பிசப் ஜஸ்ரின் மீடியா லைபிறறி அன்ட் மீடியா றிசேச் சென்ரர் இயக்குனராகவும் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் |