லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள கடையொன்றில் நடந்த மோசடி
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் கடையொன்றில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Hayes பகுதியிலுள்ள கடை ஒன்றில் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வர்த்தக தரநிலை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் குடியிருப்பாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
கடையின் உரிமையாளர் தவறினை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், 4463 பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
குறித்த கடையில் பாதுகாப்பற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
