யாழில் உயிரிழந்த ஓய்வுபெற்ற தமிழ் இராணுவ அதிகாரிக்கு இராணுவ மரியாதையுடன் இறுதி நிகழ்வு (video)
யாழ்- கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலம் 21 வேட்டுக்கள் முழங்க இன்றையதினம் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த 1958ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இராணுவ மரியாதை
இந்நிலையில் அவர் மூப்பு காரணமாக கடந்த (23.01.2023) அன்று கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, கீரிமலை இந்து மயானத்தில் 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் அவரது உடல் தீயில் சங்கமமானது.
இந்த இறுதி நிகழ்வில் யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேயர்
ஜெனரல் போத்தொட்ட, இராணுவ படைப்பிரிவு அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.








மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
