ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது
இலங்கை இராணுவத்தில் (Sri Lanka Army) இருந்து விலகியவர்களை உக்ரைன் - ரஷ்ய யுத்த களத்துக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிய ஏராளமான சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்ய (Russia) முன்னரங்க நிலைகளில் பாதுகாப்புக் கடமைகளுக்காக சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆட்களை அனுப்பி வந்துள்ள செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இராணுவ மேஜருக்கு உதவியுள்ள நபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri