மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு
வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு பூரணப்படுத்தும் செயற்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உட்பட ஏனைய தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்
மேலும், எதிர்காலத்தில் இப்பகுதியில் ஏற்படும் வெள்ள நிலையின் அளவீட்டை இலகுவாக கணீப்பீடு செய்வதற்காகவும் அவ்வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் வாகனங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தத் தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றது.

சுமார் 6 அடிக்கும் அதிகமான அளவீட்டுடன் இந்தத் தூண்கள் கொங்கிறீட் கற்களை கொண்டு தடுப்புச்சுவர் போன்று அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam