மல்லிகை செய்கைக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு தடை ஏற்படுத்துகின்றார் கஜேந்திரன் எம்.பி !
மக்கள் பிரதிநிதி ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எமது சமூகத்திற்கு எதிராக செயற்பாடுகளை மேற்கொள்வதை உடன் நிறுத்திக்கொள்ளுமாறு மல்லிகை செய்கையாளர் தம்பாப்பிள்ளை பிறேமேந்திரராஜா தெரிவித்துள்ளார் .
வவுனியா ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா - புளியங்குளம், பழையவாடியில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மல்லிகை மாதிரி செய்கைக்கு பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்டு, அளவீட்டுப்பணிகள் இடம்பெற்ற போது, அங்கு வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு எனது மல்லிகை செய்கை காணிக்கு தடை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அங்குள்ளவர்களை வைத்து முன்னெடுத்து வருகிறார்.
இதனால் எனது வாழ்வாதாரமும் அங்கு தொழில் புரியும் மக்களின் வாழ்வாதாரமும் முடக்கப்பட்டுள்ளது .
நேற்று முன்தினம் புளியங்குளம் - பழையவாடிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு இடம்பெற்ற காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்ததும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
அத்துடன் அங்கு வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், காண்டீபன் ஆகியோர் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எனது செய்கைக்கு தடை ஏற்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர் .
மக்களின் பங்களிப்புடன், மின்சார சபையினரின் அனுமதியுடன் அரச நில அளவை திணைக்களத்தினால் அளவீட்டுப்பணிகள் இடம்பெற்று கொண்டிருந்தபோது, அங்கு வந்து எனது நடவடிக்கைக்குத் தடை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் .
இச் செயற்பாடுகளை கஜேந்திரன் எம்.பி, உடன் நிறுத்தி
கொள்ளுமாறு” மேலும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri