சமையல் எரிவாயு தட்டுப்பாடு: நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மூடப்படும் உணவகங்கள்
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30 வீதமான உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் எதிர்காலத்தில் மேலும் பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லிட்ரோ நிறுவனம் நேற்றைய தினம் எரிவாயு சிலிண்டர் விலையை 5,175/- ரூபாவாக அதிகரித்ததுடன், பின்னர் முடிவை மாற்றியிருந்தது.
இதேவேளை,எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும்,எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



