முல்லைத்தீவில் சுகாதார விதிமீறல்..! உணவகத்திற்கு சீல் - தொடர் சோதனையில் அதிரடி நடவடிக்கை
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், முறையான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாத உணவகமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை நேற்று(03.07.2026) பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உணவகம் சீல் வைப்பு
முள்ளியவளை சந்தைக்கு அருகில் அமைந்துள்ள உணவகமொன்றே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

முறையான சுகாதார நடவடிக்கையில்லாமல் உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையினால் நேற்று(03) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, உணவகத்திற்கு 20 000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகம் சீல் வைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.

