அரசாங்கம் ஊடக அடக்குமுறையை நாடாது - நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதி
அரசாங்கம் எந்த நேரத்திலும் ஊடக அடக்குமுறையை நாடாது என்று கூறிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளைப் பரப்பும் எந்தவொரு ஊடகத்திற்கும் எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடும் விமர்சனங்கள்
சமூக ஊடக தளங்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சித்து அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டலாம்.

இருப்பினும், சில தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளைப் பரப்பி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன இது, டிட்வா சூறாவளிக்குப் பிறகு மறுகட்டமைப்பு முயற்சிகளைத் தடுக்கின்றன மற்றும் சுகாதாரத் துறை குறித்து மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன.
இந்த நிலையில், ஒரு தவறான அல்லது திரிபுபடுத்தப்பட்ட செய்தி வெளியிடப்பட்டவுடன் மட்டுமே அரசாங்கம் தலையிடுகிறது என்று கூறியுள்ள நளிந்த ஜயதிஸ்ஸ, எந்த நிலையிலும் ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்யாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.