பாடசாலை மாணவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகளை தீர்க்க ஒரு நிகழ்வு
பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்த நிகழ்ச்சித் திட்டமானது நீதி, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், SEDR நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் தி /தி/ விபுலானந்தா கல்லூரியில் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்றது.
கலந்து கொண்டோர்
பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் நா. மதிவண்ணனின் வழிகாட்டலில், பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. றிழ்வான் பாத்திமாவின் ஒருங்கிணைப்பில், அப்பாடசாலை அதிபர் காளிராசா மற்றும் திவாகரன் ஆசிரியரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
[UTWPMG[
இதன்போது வளவாளர்களாக எ.எஸ்.எம் நிஜாம் மற்றும் எ.எம். ஜெர்ஸாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இப்பயிற்சி செயலமர்வினைத் தொடர்ந்து மாணவர்கள் பாடசாலைக்குள் ஏற்படும் பிணக்குகளை தாமே தீர்த்துக் கொள்வதற்காக பிரயோக ரீதியான அறிவினைப்பெற்றுக் கொண்டதுடன் எதிர்காலத்தில் அப்பாடசாலையில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்காக மாணவர்கள் மத்தியஸ்தர்களாக இருப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.



