மடு திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்!
எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(1) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தீர்மானங்கள்
இதன்போது மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தால் அதற்கு அமைவாக திணைக்களங்கள் தொடர்பான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசேட புகையிரத சேவை
மேலும் விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும், அநுராதபுரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் புகையிரத சேவைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மடு புகையிரத நிலையத்தில் இருந்து மடு திருத்தலத்திற்கு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் கோவிட் தொற்று மீளவும் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர்
இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து
நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார்,
சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், ராணுவ அதிகாரிகள்
என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan
