கட்டுக்கரை குளத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் காலபோக பயிர்ச்செய்கை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றம்
மன்னார் மாவட்ட விவசாய குழுக்கூட்டம் நேற்று (07.10.2026) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் முக்கிய குளங்களில் ஒன்றான கட்டுக்கரை குளத்தின் கீழ் காலபோக பயிர்ச்செய்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 31,339 ஏக்கர் நிலத்தில் காலபோகம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
நெற் செய்கைக்கான நீர் விநியோகம்
கட்டுக்கரை குளத்தின் கீழான பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கான முதல் நீர் விநியோகத் திகதியாக 23.10.2026 தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

விதைப்பு இறுதித் திகதி புழுதி விதைப்பு, 4 மாதங்களைக் கொண்ட நெல் விதைப் போர் 15.10.2026க்குள் தங்களுடைய நெல் விதைப்பினை பூர்த்தி செய்ய வேண்டும்.
3 அல்லது 3½ மாதங்கள் நெல் விதைப்போர் 12.11.2026க்கு முன்பு தங்களுடைய நெல்லினை விதைப்பு செய்திருத்தல் வேண்டும். 2½ மாத நெல்களை விதைப்போரும் 12.11.2026க்கு முன்பதாக தங்களுடைய நெல்களை விதைப்பு செய்திருக்க வேண்டும்.

அதற்குப் பின்னர் நெல் விதைப்பு செய்வோர் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது ஆன பாதிப்புகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆக மாட்டார்கள். விதைப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியை விவசாயிகள் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பயிர்ச்செய்கை
அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பை தவிர்த்து, மேலதிக இடங்களில் சட்டவிரோதமாக பயிர் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 18 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் உரிய காலப்பகுதியில் பயிர்ச் செய்கையை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்களம், பணிப்பாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் உதவி பணிப்பாளர், நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan