பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டமானது, தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில், பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, யுத்தத்தில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர், கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிதி தொடர்பான அனுமதிகளும், நிதிக் குழு கூட்ட அறிக்கைகளும் ஆராயப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சாரதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உள்வாரியான சாரதிகளை தற்காலிகமாக பணிக்கு அமர்த்த இரண்டு தொழிலாளர்களை பணிக்கு சேர்க்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சபை கூட்டங்களுக்கான போதிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.