யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம்

Jaffna Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Theepan Dec 20, 2023 01:58 AM GMT
Report

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய் பரவல் அதிகமானதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ஆம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை : அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை : அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

“யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் மிக உச்சநிலையை அடைந்துள்ளது. நேற்றைய தினத்தில் (19) மட்டும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 111 டெங்கு நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யாழ். மாவட்டத்தில் இம்மாதம் 18ம் திகதி வரை 886 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் | Resolution Undertake Dengue Eradication Activities

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பூச்சியியல் ஆய்வுக்குழுவினர் யாழ் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் மிக அதிகமான டெங்கு பரவல் இருப்பதாகவும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் பெருகிக் காணப்படுவதாகவும் அடையாளம் கண்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட  நுளம்புக்குடம்பிகள்

குறிப்பாக வைத்தியசாலை வளாகங்கள், பாடசாலை வளாகங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அரசாங்க அலுவலகங்கள், அரசாங்க விடுதிகள், தனியார் கல்வி நிறுவன வளாகங்கள் போன்றவற்றில் டெங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புக்குடம்பிகள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் | Resolution Undertake Dengue Eradication Activities

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் காணப்படும் இந்நிலைமை ஏனைய பிரதேசங்களிற்கும் வியாபித்து யாழ்.மாவட்டம் முழுவதும் டெங்கு தாக்கம் ஏறத்தாழ அபாயகரமான நிலைமையை எட்டியுள்ளது. எனவே யாழ்.மாவட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இலங்கையர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இலங்கையர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை


சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ஆம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேற்குறித்த அனைத்து வளாகங்களிலும் அங்கு கடமையாற்றுவோர் மற்றும் தங்கியிருப்போர் சிரமதானம் மூலம் நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள் மற்றும் கொள்கலன்களை அகற்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் | Resolution Undertake Dengue Eradication Activities

வளாகங்களின் அளவினைப் பொறுத்து இச்சிரமதான நடவடிக்கையானது தொடர்ந்து 22ஆம் திகதியும் மேற்கொள்ள வேண்டியிருப்பின் தவறாது குறித்த சிரமதானம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடு வளவுகளில் நீர் தேங்கி நிற்கக்கூடிய சகல கொள்கலன்களை அகற்றி டெங்கு நுளம்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் | Resolution Undertake Dengue Eradication Activities

மேற்படி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பாடசாலைகள் மற்றும் பல்கலைகழக நிருவாகங்களும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

யாழில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

பிரபல தனியார் உணவகத்தின் மோசமான செயல் : சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை

பிரபல தனியார் உணவகத்தின் மோசமான செயல் : சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US