ஐ.நா.வில் இருந்து ரஷ்யாவை இடைநீக்க தீர்மானம்! 93 வாக்குகளால் ஆதரவு
மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபை வாக்களிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்தும் நடவடிக்கைக்கு ஆதரவாக 93, எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயராகியுள்ளன. ஐ.நா.வில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி 7 நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்ய கூட்டமைப்பை வெளியேற்றுவதற்கான வரைவு தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இருந்து இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் விலகி இருந்தன.
இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நாடுகளில் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்கு பதிவு செய்துள்ளன.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam