ஜப்பான் அரசாங்கத்திற்கு நிதியை மீளளிக்க தீர்மானம்!

Jaffna Sri Lanka Japan Northern Province of Sri Lanka
By Theepan Oct 18, 2022 11:23 AM GMT
Report

ஜப்பான் நிதி தொடர்பில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈபிடிபியுடன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் சமரசம் செய்துகொண்டதையடுத்து ஜப்பான் அரசாங்கத்தின் நிதியை மீளளிக்க யாழ்.மாநகரசபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதாந்த அமர்வின் போது யாழ். மாநகர சபையின் ஆட்சியாளர்கள், ஜப்பான் நிதி தொடர்பில் மக்களது நலன்களை கருத்திற்கொள்ளாது தான்தோன்றித்தனமாகவும், சுயநலத்துடனும், கருத்துக்களையும், செயற்பாடுகளையும் மேற்கொள்வதாக குற்றம் சாட்டியிருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் தொடர்பில் முதல்வர் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முதல்வர் இணக்கம் தெரிவிக்காமையால் குறித்த சபையின் அமர்வை மணிவண்னன் தரப்பை சார்ந்த உறுப்பினர்களை தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிவேறியிருந்தனர்.

கள நிலைமையின் பாதக தன்மை

ஜப்பான் அரசாங்கத்திற்கு நிதியை மீளளிக்க தீர்மானம்! | Resolution To Return Funds To Japanese Government  

இதனால் சபை நடவடிக்கையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய (17.10.2022) அமர்விலும் வலுவான வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் கள நிலைமையின் பாதக தன்மையை கருத்திற் கொண்ட முதல்வர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை அழைத்து  குறித்த விடயம் தொடர்பில் பேசியிருந்தார்.

இதன்போது ஜப்பான் அரசின் நிதியை பயன்படுத்த முடியாமைக்கும் அது தொடர்பாக கடந்த கூட்டத்தில் விவாதித்த கருத்துக்களுக்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களும், விவாதங்களும் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (17.10.2022) சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இராஜதந்திர நடைமுறைகள்

இதன்போது யாழ். மாநகரசபையின் சுகாதார தேவைக்கான வாகனக் கொள்வனவுக்காக ஜப்பான் அரசினால் வழங்கப்பட்ட நிதியை பயன்டுத்துவதில் சபை தவறிழைத்துள்ளது என்றும், இவ்வாறான தவறுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக முதல்வர் மணிவண்ணன் சபையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஜப்பான் அரசாங்கத்திற்கு நிதியை மீளளிக்க தீர்மானம்! | Resolution To Return Funds To Japanese Government

ஜப்பான் நிதியை மீளளிக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதாக குறித்த விடையத்தை சபையில் முதல்வர் மணிவண்ணன் பிரஸ்தாபித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடையம் வெளிநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நடைமுறைகளை பாதிக்கும் என்பதுடன் இதை தொடர்ந்தும் பேசுபொருளாக வைத்து சபையில் விவாதித்துக்கொண்டிருக்காமல் முடிவுக்கு கொண்டுவருவது சிறந்ததென மாநகரின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியிருந்ததுடன் நிதியை மீளளிக்கும் கோரிக்கையை நிறைவேற்றுமாறும் முன்மொழிந்திருந்தார்.

ஜப்பான் அரசாங்கம் 

இந்நிலையில் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதியை மீளளிக்க சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மழைகாலம் ஆரம்பகாகியுள்ளதால் நீர் வடிகாலமைப்பு மற்றும் குளங்களை தூர்வாரி பராமரிப்பது தொடர்பிலும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அதற்கான தீர்வை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும் விளம்பர பலகை பொருத்துவது, நகரப்பகுதி உள்ளிட்ட முக்கியம் வாய்ந்த இடங்களை தூய்மையாக்கும் செயற்பாட்டை தனியாருக்கு கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் தற்போது முன்னெடுப்பவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கும் சபை அனுமதியளித்திருந்தது.

அத்துடன் வீதிகளில் கழிவுகளை கொட்டுபவர்களை இனங்காணும் பொறிமுறை தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தண்டப்பணம் அறவிடவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US