நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில்: யாழ். மாநகர முதல்வர் அறிவிப்பு

COVID-19 Jaffna Nallur Kandaswamy Kovil
By Theepan Aug 23, 2022 05:00 AM GMT
Report

நல்லூர் திருவிழாவின்போது யாழ். மாநகரசபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்குமெனவும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும், இதற்காக நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆலய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில்: யாழ். மாநகர முதல்வர் அறிவிப்பு | Special Team Will Monitor Nallur Festival

சிறப்பாக இடம்பெறும் நல்லூர் மஹோற்சவம்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கோவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் தற்போது மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

ஆகஸ்ட் 25ஆம் திகதியன்று தேர்த்திருவிழாவும், 26ஆம் திகதியன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில்: யாழ். மாநகர முதல்வர் அறிவிப்பு | Special Team Will Monitor Nallur Festival

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.

அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

கோவிட் எச்சரிக்கை காணப்படுவதால் பக்தர்கள் தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும்.

திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ். மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவு செய்துள்ள சம்பவங்கள் சில இனங்காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில்: யாழ். மாநகர முதல்வர் அறிவிப்பு | Special Team Will Monitor Nallur Festival

இனிவரும் திருவிழாக்களின் போது ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளிகளை பதிவு செய்தால் சில வேளைகளில் ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றது.

விசேட கோரிக்கைகள்

நல்லூர் ஆலயப்பகுதியை சூழ உள்ள கட்டுப்பாடுகள் வீதி தடைகள் தொடர்ந்தும் காணப்படும். அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடியவர்கள் அங்க பிரதிஷ்டை செய்யும் ஆலய சுற்றுப்பகுதிகளில் ஒருசிலர் கச்சான் கோது, மிகுதி உணவுடன் வீசப்பட்ட பைகள் என்பவற்றை மணலில் போட்டு செல்வதால் சுத்தம் செய்யும் போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US