மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவியை ராஜினாமா செய்யத்தீர்மானம்
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தனது பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்று இந்த தீர்மானம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும், மீனவர் பிரச்சினை தீரும் வரையிலும், பிம்ஸ்டெக் மாநாடு நடைபெறும் வரையிலும் தாம் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பதவியில் நீடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பேராசிரியர் நலின் டி சில்வா இந்த விடயம் பற்றிய பதிவொன்றை இட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 12 மீனவர்கள் தற்பொழுது மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த கைதிகள் குறித்து மியன்மாருக்கான இலங்கைத் தூதரகத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri