எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி! முச்சக்கர வண்டி கட்டணத்தை உயர்த்த தீர்மானம்
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிக்க முச்சக்கர வண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, தற்போது முதல் கிலோ மீட்டருக்கு ரூ.100 ஆக இருக்கும் முச்சக்கர வண்டி கட்டணத்தை, இரண்டாவது கிலோ மீட்டருக்கு ரூ.90 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான தீர்வு
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் பல பிரச்சினைகள் உருவாகும் என சங்கத்தின் தலைவர் லலித்தர்மசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுபாடு காரணமாக நீண்ட நேரம் எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன், பல தனிநபர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பினால் மதிய உணவுப்பொதிகள், உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri