வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானம்: சங்கங்கள் கூட்டாக முடிவு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 6 ஆம் திகதி அனைத்து கடைகள் மூடப்படும்.
மேலும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது எனவும், முச்சக்கரவண்டிகல் சேவையில் ஈடுபடாமலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பல்கலைக்கழகம், ஆசிரியர் சங்கங்கள் தமது கடமையிலிருந்து விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை 6 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்த
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam