நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானம்
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ரணில் அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த டிரான் அலஸ், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
எனினும் குறித்த சட்டத்தின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக அப்போதைக்கு எதிர்க்கட்சியும், வேறு சிவில் தரப்புகளும் எதிர்ப்பு வௌியிட்டிருந்தன.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு உள்ளிட்ட சில சிவில் அமைப்புகள், அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
குறித்த வழக்கு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சிலதிருத்தங்களை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |