சபையில் தயாசிறி ஜயசேகர ஆவேசம்! தொடரும் அமளி துமளி
நாடாளுமன்றத்தின் இன்றைய(05.02.2025) அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றுகையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறுக்கிட்டதால், சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் தொடர்பாகவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாகவும் தயாசிறி ஜயசேகர உரையாற்றுகையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறதே தவிர வேறு எதையும் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, இடைமறித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, அரசாங்கம் செய்த நல்ல விடயங்களை சுட்டிக்காட்டத் தொடங்கினார்.
தயாசிறியின் சவால்
தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிக்கிடுவது தவறு என தேசிய மக்கள் சக்தியினரை தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, குறுக்கிட்ட, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, கடந்த ஆட்சியில் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணத்தை எடுத்ததாக குற்றம் சுமத்தினார்.
அப்போது, அரசாங்க பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, தான் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை எடுத்ததாகவும் முடிந்தால் அதனை குற்றமாக நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.
இருவேறு விடயங்கள்
அத்துடன், இன்றைய ஆளும் கட்சியினர், 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியமைக்க உதவி புரிந்ததாகவும், மைத்திரி - ரணில் கூட்டணி ஆட்சியமைக்க உதவியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து குறுக்கிட்ட பிமல், ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதும் ஜனாதிபதி நிதியை துஸ்பிரயோகம் செய்வதும் இருவேறு விடயங்கள் என குறிப்பிட்டார்.
இதேவேளை, தயாசிறி ஜயசேகர நாட்டு மக்களை ஏமாற்றியதாக விவசாயத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க எழுத்து பேசுகையில், நாட்டிற்கு அரிசி கொண்டுவர முடியாத நீங்கள் எழுத்து கதைக்க வேண்டாம் என தயாசிறி கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |