ஜனாதிபதி கோட்டபாய தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், மின்சார சபையிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டதன் காரணமாக பெற்றோலியத்திற்காக வழங்கப்பட்ட 80 பில்லியன் ரூபா கடனை மீளச் செலுத்துவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களின் நிலைமையை கருத்திற் கொண்டு எரிபொருளின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி நேற்று பிற்பகல் விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டியமை குறிப்பிடத்தக்கது.