மாவீரர் துயிலும் இல்ல காணிகள் தொடர்பில் கேள்வியெழுப்பிய தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அந்த காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம், கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிசாளர் நிரோஷ் வலிறுத்தல்
இது தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் பேசுகையில்,
“ மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம். அது முந்தைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம். துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிடைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, “இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனையடுத்து தவிசாளர், “ 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, “ மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும். தையிட்டி விகாரை கூட அவ்வாறு தான்“ என பதிலளித்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத தவிசாளர், “ இந்த கூட்டத்தில் ஏன் இதில் இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் காணி பயண்பாட்டுக் குழு ஊடாக நடந்துள்ளதா என தவிசாளர் கேட்க, அதற்கு பதில் கொடுத்த பிரதேச செயலாளர், “ அது விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான்” என தெரிவித்துள்ளார்.
வித்துடல்களை பாதுகாக்க நடவடிக்கை
இறுதியாக, காணி உத்தியோகத்தர் பதிலளிக்கையில்,
“சிறைச்சாலை திணைக்களத்திற்குச் சொந்தமான காணி அது. கடந்த 2014ஆம் ஆண்டு பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.
மீண்டும் தவிசாளர், “ இது எந்தத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட காணியாகவும் இருக்கலாம். இந்த காணியில் இருப்பது ஆயிரக்கணக்கானவர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இங்கு நினைவு கூர்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும்.
அடிப்படையில் மயானங்கள் உள்ளராட்சி மன்றங்களுக்கு பாரதீனப்படுத்தப்பட வேண்டும். சட்ட ரீதியில் உள்ளுராட்சி மன்றங்களே அந்த காணிகளை நிர்வகிக்க முடியும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன், எம்.பி, “ இந்த விடயம் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையது” என கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த தவிசாளர், “ இங்கு உத்தியோகத்தர்களால் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படையில் துயிலும் இல்ல காணி தொடர்பில் பல மாற்றங்கள் வெளித்தெரியாது நடந்துள்ளன. நீங்கள் அரசாங்கத்தின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் - அபிவிருத்திக் குழுத்தலைவர் எனவே அரசாங்கம் என்று வேறு ஒரு சக்தி இருப்பதாக நாம் கூறக்கூடாது.
அரசாங்க முடிவில் நீங்கள் செல்வாக்குச் செலுத்த வேண்டும். விரைவில் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றால் போன்று அபிவிருத்திக் குழுக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த அபிவிருத்திக்குழு தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பது பாதுகாப்பானது. இந்த காணி திணைக்களம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது” என அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதிலளித்தார்.
அதற்கு கேள்வி தொடுத்த தவிசாளர், “ நீங்கள் உறுதியாக கூறாது சமாளித்த கூறுகின்றீர்கள். ஆகவே இந்த காணி சிறைச்சாலைத் திணைக்களத்திடம் இருந்து பிரதேச செயலகத்திற்கு விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று நீங்கள் உத்தரவாதமளிப்பதை பதிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri