இலங்கை தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - பிரித்தானியா வரவேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை வரவேற்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இந்த தீர்மானம் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் என பிரித்தானியாவின் வெளிநாடு பொதுநலவாயம் அபிவிருத்திக்கான அலுவலகம் ஆகியவற்றிற்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கான எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துவதற்காக ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆணையை புதுப்பித்துள்ளது.

உறுப்புநாடுகளிடம் ஆதரவு வேண்டும் என கோரிக்கை
மேலும், இது உண்மையை நிலைநாட்டுவதற்கும் நிரந்தர நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் நாட்டில் மனித உரிமைகளை ஏற்படுத்துவதற்கும் அவசியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை முன்னெடுத்து செல்ல உதவுவதற்காக புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான எமது கூட்டு மற்றும் புதுப்பிக்கப்பட்ட திறனில் எங்கள் கவனம் இனிமேல் திரும்பவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகளின் ஆதரவையும் அவர் கோரியுள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri