ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
பொதுஜன பெரமுனவின் ஆளுகையில் இருக்கும் பண்டாரகம பிரதேச சபையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய விசேட பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் பி பெரேரா அவைத் தலைவர் தேவேந்திர பெரேராவிடம் கையளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மகேஷ் கொத்தலாவல மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவாக எதிர்க்கட்சி சார்பில் வாக்களித்திருந்தார்.

சபையில் இருந்து வெளிநடப்பு செய்த உறுப்பினர்
பண்டாரகம பிரதேச சபையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் உட்பட 18 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் 7 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன், காமினி சரத்சந்திர, அகில பீரிஸ், தயானந்தனி பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
பிரேரணைக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சபைக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர் தர்ஷன பீரிஸ் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri