இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி நிலை! உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை அதிகரிக்கப்படுகிறது
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) காலை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடி தற்போதைய நிலைமை தொடர்பில் பேசி, நேற்று (27) முதல் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால் பேக்கரி பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாளை (29) முதல் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri