ரணிலை பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்கு மாவட்ட மட்டங்களில் தீர்மானம்: வெளியாகியுள்ள தகவல்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பனவும் அண்மையில் தீர்மானித்துள்ளன.
நிறைவேற்றியுள்ள தீர்மானம்
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் அரசியல் கோட்டையான அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெற்றோர்களுக்கு தெரிந்த உண்மை, ஷாக்கில் ஆனந்தி எடுத்த சோகமான முடிவு... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan
