மொட்டுக்கட்சிக்குள் கடும் மோதல்: நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க திட்டம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமல் ராஜபக்சவின் விருப்பத்தின் பேரில் இந்த கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா முன்னிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகள் வலுவடையும் நிலை
இவ்வாறான பின்னணியில் தம்மிக்க பெரேரா தேர்தலில் போட்டியிட முன்வந்தால் எதிர்க்கட்சிகள் வலுவடையும் என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |