கட்சி உறுப்பினர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் ரணில்: கவலை வெளியிட்டுள்ள மொட்டு கட்சி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தை மீறி கட்சியின் தனிப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் அமைப்பாளர்களும் ஜனாதிபதியின் பக்கம் சாய்ந்ததை அடுத்தே இவ்வாறு கவலை வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, தற்போது, பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஜனாதிபதிக்கு விசுவாசமாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
