கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களின் தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
கிளிநாச்சி - பச்சிலைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களினுடைய மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியேறிய மக்களினுடைய தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், நேற்று (30.01.2025) பகல் 10 மணிக்கு மாவட்ட அரச அதிபர் தலைமையில் முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பதிவுகள் மேற்கொள்ளல்
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை, கிளாலி, இத்தாவில் மற்றும் ஏம்பெடுகேணி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் கடந்த 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக முழுமையாக இடம்பெயர்ந்து இன்றுவரை மீள் குடியமர முடியாத நிலையில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் இதுவரை 30 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறவும் 60 வரையான குடும்பங்கள் தங்களுடைய காணிகளை பராமரிப்பதற்கும் பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முகமாலை பிரதேசத்தில் கன்னிவெடி அகற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் பிரதேச செயலாளர் மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் இடம்பெயர்ந்த மக்கள எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam