மட்டக்களப்பில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு
மட்டக்ககளப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் நேற்று (24.01.2024) கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாழி ஒருவரின் வலையில் சிக்குண்ட நிலையில் இரு குண்டுகளும் காணப்பட்டுள்ளன.
குண்டு செயலிழப்பு
இதனை அவதானித்த குறித்த கடற்றொழிலாழி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் இரு குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இரண்டு குண்டுகளும் 9 அங்குலம் கொண்டவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் யுத்த காலத்தின் போது பட்டிருப்பு பாலத்தின் இருமருங்கிலும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan