யாழில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்பு: ஒருவர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
இந்நிலையில், விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், மோட்டார் சைக்கிள் காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அல்லாரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரை நேற்றையதினம்(29) அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
