நாவலப்பிட்டி பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு (Photos)
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பம் இன்று(25) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களின் கருத்துக்கள்
மிக நீண்ட காலமாக இத்தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில், தேயிலை மலைகளில் போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி இந்த சிறுத்தை உயிரிழந்துள்ளது.
இதனூடாக தற்போது தேயிலை மலைகளுக்குள் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த காலங்களில் சிறுத்தைகளின் நடமாட்டத்தினால் தேயிலை மலைகளில் தொழிலில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
உயிரிழந்த சிறுத்தையின் உடல் நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்தமை தொடர்பில் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் உடற் கூறுகள் பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதென நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




